மலேசியன் பிரைட் ரைஸ் - Malaysian Fried Rice Recipe in Tamil - Awesome Cuisine (2024)

ஒரு மாறுதலுக்காக நீங்கள் இந்த மலேசியன் பிரைட் ரைசை முயற்சி செய்து உங்கள் குடும்பத்தினரை சர்ப்ரைஸ் செய்யலாம்.

Jump to Recipe

பிரைட் ரைஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு. இவை குறிப்பாக இளம் தலைமுறையினர்களின் ஃபேவரட் டிஷ் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆரம்ப காலகட்டங்களில் ஓரிருமுறையில் செய்யப்பட்டு கொண்டிருந்த பிரைடு ரைஸ், காலப்போக்கில் ஏராளமான செய்முறைகள் வந்து விட்டன.

அதில் இன்று நாம் காண இருப்பது மிகுந்த சுவையான மலேசியன் பிரைட் ரைஸ். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்கும் ஒரு சுவாரசியமான ப்ரைட் ரைஸ்ஸின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

மலேசியன் பிரைட் ரைஸ் - Malaysian Fried Rice Recipe in Tamil - Awesome Cuisine (1)

Malaysian Fried Rice

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

பொதுவாக நாம் அசைவம் மற்றும் சைவ வகைகளை சேர்ந்த சிக்கன் ஃபிரைட் ரைஸ், எக் ப்ரைட் ரைஸ், வெஜிடபிள் பிரைட் ரைஸ், பன்னீர் பிரைட் ரைஸ் போன்ற பிரைட் ரைஸுகளை செய்து உண்டு மகிழ்ந்திருப்போம். இம்முறை ஒரு மாறுதலுக்காக நீங்கள் இந்த மலேசியன் பிரைட் ரைசை முயற்சி செய்து உங்கள் குடும்பத்தினரை சர்ப்ரைஸ் செய்யலாம். வீட்டில் உள்ள குட்டீஸ்களுக்கும் இது மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

நாம் வழக்கமாக உண்ணும் இந்திய வகை பிரைடு ரைஸுகளை விட மலேசியன் ப்ரைட் ரைஸ் சற்று வித்தியாசமாக இருக்கும். இதற்கென்று தனியாக ஒரு வித்தியாசமான மசாலாவை நாம் செய்யவிருக்கிறோம். பொதுவாக மலேசியன் ப்ரைட் ரைஸ்ஸை சைவம் மற்றும் அசைவ முறையில் மக்கள் செய்து சுவைக்கின்றன. நாம் இன்று இங்கு காண இருப்பது சைவ முறையில் செய்யப்படும் மலேசியன் பிரைட் ரைஸ்.

சில குறிப்புகள்:

பாசுமதி அரிசியை வேக வைக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டால் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும.

பாசுமதி அரிசியை முதலில் முக்கால் பாகம் (15 லிருந்து 20 நிமிடம்) மட்டும் வேக வைக்கவும். சாதம் வெந்ததும் தண்ணீரை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி வைக்கவும். அதில் இருக்கும் ஈரப்பதம் நன்கு உலர்ந்தால் தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

சிகப்பு மிளகாய்யை எட்டில் இருந்து பத்து நிமிடம் வரை தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும். ஊற வைத்த தண்ணீரையே மசாலா அரைக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

மஷ்ரூமுக்கு பதிலாக கேரட், பீன்ஸ் போன்ற நமக்கு பிடித்த காய்கறிகளையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

இவ் உணவின் வரலாறு:

சைனாவின் Sui Dynasty ல் தான் ஃப்ரைடு ரைஸ் முதல் முதலாக உணவு பழக்கத்தில் சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் உலகம் முழுவதும் உணவு பிரியர்கள் மத்தியில் ப்ரைட் ரைஸ்க்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அந்தந்த பகுதிகளின் உணவு முறைகேற்ப சிறு சிறு மாற்றங்களோடு பிரைட் ரைஸ்ஸை மக்கள் செய்து உண்ண தொடங்கினர். இன்று வெவ்வேறு நாடுகளுக்கு அதற்கென்று பிரைட் ரைஸ் செய்யும் முறை இருக்கின்றது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

சுமார் அரை மணி நேரத்தில் இதை செய்து முடித்து விடலாம்.

இதை நான்கு பேருக்கு தாராளமாக பரிமாறலாம்.

இதை ஒரு நாள் பிரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

  • வெஜிடபிள் பிரைட் ரைஸ்
  • சிக்கன் பிரைடு ரைஸ்
  • எக் ஃபிரைடு ரைஸ்

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

மலேசியன் ப்ரைட் ரைசில் சேர்க்கப்படும் பாஸ்மதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.

நாம் சேர்க்கும் குடைமிளகாயில் விட்டமின் C மற்றும் B6 உள்ளது. இவை இதயம், கண், மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

நாம் சேர்க்கும் வேகவைத்த பச்சை பட்டாணி புரத சத்து, நார் சத்து, விட்டமின் K மற்றும் A உள்ளது.நாம் சேர்க்கும் வேகவைத்த சோளத்தில் புரத சத்து, நார் சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கொழுப்பு சத்து உள்ளது.

மலேசியன் பிரைட் ரைஸ்

ஒரு மாறுதலுக்காக நீங்கள் இந்த மலேசியன் பிரைட் ரைசை முயற்சி செய்து உங்கள் குடும்பத்தினரை சர்ப்ரைஸ் செய்யலாம்.

Prep Time20 minutes mins

Cook Time15 minutes mins

Total Time35 minutes mins

Course: Main Course

Cuisine: Malaysian

Ingredients

  • 1 cup பாசுமதி அரிசி
  • 250 g மஸ்ரூம்
  • 1/2 cup பச்சை குடைமிளகாய்
  • 1/2 cup மஞ்சள் குடை மிளகாய்
  • 1/2 cup சிவப்பு குடைமிளகாய்
  • 1/2 cup வேகவைத்த சோளம்
  • 1/2 cup வேகவைத்த பச்சை பட்டாணி
  • 8 பூண்டு பல்
  • 8 சிவப்பு மிளகாய்
  • a small piece இஞ்சி
  • 3 tsp துருவிய தேங்காய்
  • 2 tsp எள் எண்ணெய்
  • 2 tsp சோயா சாஸ்
  • 1 tsp வினிகர்
  • 1 tsp பெப்பர்
  • 1 tsp உப்பு
  • 1/2 tsp சர்க்கரை
  • தேவையான அளவு ஸ்ப்ரிங் ஆனியன்
  • தேவையான அளவு தண்ணீர்

Instructions

  • ஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  • இப்பொழுது மஸ்ரூம், குடமிளகாய்கள், இஞ்சி, பூண்டு, மற்றும் ஸ்ப்ரிங் ஆனியனை நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.

  • அடுத்து நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு, துருவி வைத்திருக்கும் தேங்காய் மற்றும் ஊற வைத்திருக்கும் சிவப்பு மிளகாய்யை மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்ட் ஆக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.

  • இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். பின்பு அதில் உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை நன்கு வடிகட்டி அதில் போட்டு 15 இல் இருந்து இருபது நிமிடம் வரை அதை வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  • ஒரு pan ஐ எடுத்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எள் எண்ணெய் சேர்க்கவும்.

  • எண்ணெய் சற்று சூடானதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா பேஸ்ட்டை போட்டு அதனின் பச்சை வாசம் போய் எண்ணெய் நன்கு பிரிந்து வரும் வரை

  • வதக்கவும்.

  • பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மஸ்ரூம் மற்றும் குடை மிளகாய்களை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

  • அடுத்து அதில் உப்பு மற்றும் பெப்பரை சேர்த்து சுமார் ஆறிலிருந்து ஏழு நிமிடம் வரை வேக வைக்கவும்.

  • ஆறு நிமிடம் கழித்து நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் சோளம் மற்றும் பச்சை பட்டாணியை அதில் சேர்த்து சுமார் ஐந்து நிமிடம் வரை வேக வைக்கவும்.

  • ஐந்து நிமிடம் கழித்து அதில் சோயா சாஸ், வினிகர், மற்றும் சர்க்கரையை சேர்த்து சுமார் ஒன்றிலிருந்து இரண்டு நிமிடம் வரை அதை வதக்கவும்.

  • இப்பொழுது அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்து பூ போல் சாதம் உடையாதவாறு கிளறவும்.

  • அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங்காணியனை போட்டு நன்கு கிளறவும். அவ்வளவுதான் உங்கள் சூடான மற்றும் சுவையான மலேசியன் பிரைட் ரைஸ் ரெடி.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

இந்த உணவுக்கு ஏற்ற சைடிஷ் என்னென்ன?

  • பன்னீர் 65
  • மஸ்ரூம் மஞ்சூரியன்
  • பன்னீர் டிக்கா
  • கோபி மஞ்சூரியன்

இதில் முட்டை சேர்க்கலாமா?

உங்களுக்கு முட்டை விருப்பம் என்றால் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். சிக்கனையும் இதில் தனியாக வேக வைத்து சேர்த்துக் கொள்ளலாம்.

இதை இன்னும் எப்படி ஸ்பைசியாக ஆக்குவது?

கூடுதலாக ரெண்டு அல்லது மூன்று சிவப்பு மிளகாய் மசாலாவில் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். சோயா சாஸ் உடன் சில்லி சாஸும் சேர்த்துக் கொள்ளலாம்.

மலேசியன் பிரைட் ரைஸ் - Malaysian Fried Rice Recipe in Tamil - Awesome Cuisine (2024)

References

Top Articles
Latest Posts
Article information

Author: Errol Quitzon

Last Updated:

Views: 6593

Rating: 4.9 / 5 (59 voted)

Reviews: 90% of readers found this page helpful

Author information

Name: Errol Quitzon

Birthday: 1993-04-02

Address: 70604 Haley Lane, Port Weldonside, TN 99233-0942

Phone: +9665282866296

Job: Product Retail Agent

Hobby: Computer programming, Horseback riding, Hooping, Dance, Ice skating, Backpacking, Rafting

Introduction: My name is Errol Quitzon, I am a fair, cute, fancy, clean, attractive, sparkling, kind person who loves writing and wants to share my knowledge and understanding with you.